மன்னார் ஆயரின் ஆசியுடன் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்றையதினம் (18) மன்னார் (Mannar) ஆயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அருட்தந்தை விக்டர் சோசை அடிகளாரையும் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்ற வேட்பாளர் சோமநாதன் பிரசாத் தனது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளார்.
தேர்தலுக்கான பரப்புரைகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் வன்னி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் தமது தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் தியாக தீபம் திலீபனது நினைவாலயத்திலிருந்து பிரசார பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பிரசார பணிகள் நல்லூர் (Nallur) பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனது நினைவாலயத்திலிருந்து இன்றையதினம் (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 15 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்