தேர்தலுக்காக தமிழர்களிடம் மன்னிப்பு நாடகத்தை அரங்கேற்றும் சிங்கள அரசியல்வாதிகள்
கறுப்பு ஜுலை (Black July) என்பது தமிழ் மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் மன்னிக்க முடியாத ஒரு நாள் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
குறித்த சம்பவத்திற்கு அத்திவாரமிட்டு மில்லியன் கணக்கிலான தமிழர்களை நிர்க்கதியாக்கியமைக்கு அடித்தளமிட்டவர்கள் நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களும் மற்றும் அவர்களை சார்ந்த அரசியல்வாதிகளும் என்பது மறுக்கப்படாத உண்மையாகும்.
இந்தநிலையில், அன்றிலிருந்து இன்று வரை குறித்த சம்பவம் தமிழ் மக்களிடையே ஆறாத வலியாகவும் அத்தோடு மறக்கமுடியாத விடயமாகவும் பயணிக்கின்றது.
சிங்கள அரசியல்வாதிகள்
அன்று திட்டமிட்டு ஒரு சமூகத்தை ஒடுக்கி நிர்கதியாகிவிட்டு தற்போது சில சிங்கள அரசியல்வாதிகள் மன்னிப்பு நாடகத்தை அரகேற்றுகின்றனர்.
குறித்த மன்னிப்பானது வரப்போகின்ற தேர்தலுக்காக நடத்தப்படுகின்ற நாடகமாகத்தான் தமிழ் மக்களால் கருதப்படுகின்றது என்பது அவர்களுக்கு புலப்படவில்லை.
இவ்வாறு குறித்த சம்பவத்தினால் ஈழத்தமிழ் சமூகத்தினர் அன்று முதல் இன்று வரை மனதில் ஆறாத ரணத்தை சுமந்து வருகின்றனர் அத்தோடு அதில் சில வார்த்தைகளை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |