காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத ரணில்! பிரித்தானிய எம்.பி கண்டனம்
வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின், தலைவி கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக்டொனாக், பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி சிவநந்தன் ஜெனிற்றா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கமுயன்ற வேளை கைது செய்யப்பட்டமை குறித்து பிரித்தானியா கண்டனம் வெளியிட வேண்டும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செவிமடுக்க மறுத்த ரணில்
மேலும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை தாக்கிய காவல்துறையினர் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இலங்கையிடம் கோரவேண்டும் எனவும் சிபான் மக்டொனாக் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துயரத்தில் சிக்குண்டுள்ள காணாமல் போனவர்களின் உறவுகளின் வேண்டுகோள்களை ரணில் விக்ரமசிங்க செவிமடுக்க மறுத்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு படையினரால்கான போரின் இறுதிக் காலத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர்.
அந்தவகையில், ஐக்கிய நாடுகளின் சபையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணை குழு தமது 2020 அறிக்கையில் இலங்கை காணாமல் ஆக்கப்படுவோரின் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
I want to condemn the arrest of the President of the Tamil Families of the Disappeared in Sri Lanka.
— Siobhain McDonagh MP (@Siobhain_Mc) January 11, 2024
I have written to the Foreign Secretary asking the Govt to send a representative to attend the court hearing.
The families of the disappeared need justice. pic.twitter.com/clh1kMGxbg
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |