தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அநுர தரப்பினரின் நிலைப்பாடு
தமிழ் அரசியல் தலைமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஒரு பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கப்போவதாக தெரிவிப்பது தொடர்பில் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் அதனை எந்த விதத்திலும் உறுதிப்படுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “தமிழர் தரப்பு சார்பாக முன்னிறுத்தப்படும் வேட்பாளர் ஒட்டுமொத்த இலங்கை நாட்டு மக்களது 50% இற்க்கும் அதிக வாக்கினை பெறும் பட்சத்திலேயே அவரால் பதவியினை எட்ட முடியும் ஆனால் அவ்வாறானதொரு விகிதாசாரத்தினை பெறக்கூடிய தகைமையுடைய ஒருவரை இனங்கண்டுகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
வாக்குகள்
அதேவேளை, நேற்றையதினம் ஒரு அரசியல் தரப்பு இது குறித்த செவ்வி ஒன்றில் தாம் போட்டியிடுவது தமது கட்சி தொடர்பிலான கொள்கைகளை உறுதிப்படுத்தவே தேர்தலில் போட்டியிடுகிறோம் என தெரிவித்திருந்தார்.
இது முற்றிலும் வாக்குகளை திசை திருப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் அரசாங்கம் வாங்கிய கடன் தொகையினை மீளச் செலுத்தாததன் காரணமாகவே டொலரினது பெறமதி குறைவடைகிறது, இந்த உன்மைத் தன்மையை மறைத்து இந்த அரசாங்கமானது பொய்வேடம் போடுகிறது இவ்வாறானதோர் அரசினை விரட்டியடித்து புதியதோர் தலைமைத்துத்தின் கீழாக நாட்டினை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடவேண்டும் என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |