“தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி” உலகத் தமிழர்களுக்கோர் வாய்ப்பு!
அனைத்துலகத் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியானது 2022.02.20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மத்திய ஐரோப்பிய நேரம் காலை 9:00 மணிமுதல் மறுநாள் (21.02.2022) காலை 9:00 மணிவரை 24 மணித்தியாலங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலகத் தாய்மொழி நாளினை முன்னிட்டு, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தாய்மொழியின் சிறப்பு, தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமை தொடர்பான தகவல்கள் அடங்கிய ஏழு பக்கங்களைக் கொண்ட ஆக்கம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆக்கத்தில் உள்ள விடயங்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் தாய்மொழிச் சிறப்பறிதல் போட்டி ஒன்று அனைத்துலகத் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் இணையவழியில் நடைபெறவுள்ளது.
இப் போட்டிகள் வயதுப் பிரிவுகள் அற்ற திறந்த போட்டியாகும். விரும்பிய அனைவரும் பங்குபற்றலாம் என்பதுடன் உலக நாடுகள் அனைத்திலுமிருந்து இப்போட்டியில் பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
