கடும் அச்சுறுத்தல்.! முதலமைச்சர் விஜய்க்கு z+ பாதுகாப்பு - குண்டு துளைக்காத வாகனம்
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு தற்போது உயர்நிலை பாதுகாப்பான Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் இன்றிலிருந்து Z+ பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பாகும், இது கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆயுதம் ஏந்திய படையினர்
அந்தவகையில், 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் விஜய்க்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனில் பொதுவாக 55 வீரர்கள் இருப்பதுடன், NSG-யின் உயரடுக்கு கமாண்டோக்கள் மற்றும் மாநில காவல்துறையினர் அடங்குவர்.
முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24x7 பாதுகாப்பும் இதில் அடங்கும்.
மேலும் முதலமைச்சர் விஜய்க்கு ஹெக்லர் & கோச் MP5 துணை இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் வழங்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |