புலம்பெயர் மக்களிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பாதுகாப்பு தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்க வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தயாராகவே இருப்பதாகவும் அரசாங்கம் அனுமதி அளித்தால் திட்டத்தை செயற்படுத்த முடியும் எனவும் தமித் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வௌியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி நிதி திரட்டிக் கொள்வதற்கான முயற்சியில் கூட்டமைப்பு இறங்கியுள்ளதாகவும் அவர்களின் போலி பரப்புரையை நம்பி நிதி வழங்க வேண்டாம் என வெளிநாட்டு வாழ் அனைத்து இன மக்களிடமும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.