இராணுவத்திற்கு பொதுமன்னிப்பு - அரசியல் கைதிகளுக்கு ஏன் இல்லை?
prison
army
war crime
By Vanan
தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரை நிகழ்த்திய கூட்டமைப்பின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது பழிவாங்கலில் ஈடுபடும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் கூட இடம்பெற்றமைக்கான வரலாறு இல்லை எனவும் குறிப்பிட்டார்.
அவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரை காணொளி வடிவில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்