ரணிலை ஆதரிக்கும் தமிழ் தரப்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை
அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எல்லாம் தேவையில்லை. தமிழ்க் கட்சிகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே (Ranil wickremesinghe) ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் பக்கமே நிற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்
எனினும், இந்த வேலைத்திட்டத்தைக் குழப்பும் முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் பக்கமே உள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர் அவசியமில்லை எனத் தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன. சி.வி. விக்னேஸ்வரன், ரணிலுக்கே ஆதரவு. அவர் ஓய்வுபெற்ற நீதியரசர். நாட்டை எவரால் நிர்வகிக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில்தான்." - என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |