வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன்! கட்டுநாயக்கவில் கைது
Tamils
Bandaranaike International Airport
Trincomalee
Italy
By Sathangani
இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலியான இலங்கை கடவுச்சீட்டு
குறித்த இளைஞனின் ஆவணங்களை பரிசோதனை செய்த போது போலியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி