இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்திய கடற்தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 64 தமிழக கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களின் உறவினர்களால் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (06) இராமேஸ்வரம் தங்கச்சிமடம் யாகப்பா பேருந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
கோரிக்கை
''ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம்(14)மற்றும் (28)ஆகிய இரு திகதிகளில் மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 தமிழக கடற்தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர்கள் நேரடியாக முன்னிலையாகி விடுதலையான விசைப்படகுகளை மீட்பதற்கு மீட்பு குழு இலங்கை செல்வதற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
கைது நடவடிக்கை
பாரம்பரிய பகுதியான கச்சத்தீவு பகுதியில் தமிழக கடற்தொழிலாளர்கள் மீன் பிடிக்க உரிமையை பெற்று தர வேண்டும்''.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது நாளை மாலை 5 மணி வரை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக இன்று மற்றும் நாளை இரு தினங்கள் கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்