இலங்கையில் நிறைவேறிய சட்டத்தால் தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு
srilanka
security
tamilnadu
portcity
By Sumithiran
கொழும்பு துறைமுக ஆணைக்குழுச் சட்டம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட நொடியிலிருந்து தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நிறைவேற்றப்பட்டு தற்போது ஆரம்பமாகவுள்ள துறைமுக நகர முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுத்துறை வழங்கிய தகவலைத் தொடர்ந்தே மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடக தகவல்பகள் தெரிவித்துள்ளன.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்தில் கையொப்பம் இட்டநிலையில் அது செயற்படத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்