தமிழர்கள் மீது இனச்சுத்திகரிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கம்: சிறீதரன் சுட்டிக்காட்டு
கடந்த 1882ம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு இன்னமும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காணி அபகரிப்புகள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கம் மற்றும் பல்துறைசார்ந்த நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்புகள் நடைபெறுகிறது.

தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சி. அந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் காணி அபகரிப்பு மற்றும் தமிழர்கள் பூர்வீகமாகக் கொண்ட காணிகளில் விகாரைகளை அமைத்தல் என்பனவாகும்.
தமிழர்களது இருப்பு விகிதாசாரம்
இவைதொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக தாம் கருத்து வெளியிட்டு வருவதாகவும், மேலும் திட்டமிட்ட அபகரிப்புக்கள் தொடர்பிலான பட்டியல் ஒன்றினை தாம் தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 1882ம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு இன்னமும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பில் நாடாளுமன்றம் தவிர்ந்த ஏனைய சர்வதேச ரீதியிலான அமைப்புக்களிடமும் தாம் குரல்கொடுக்க தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டக்கிழையின் தலைவர் குகதாசன் மற்றும் செயலாளர் சுரேஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்