ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்! நிபந்தனைகளை கூறிய சம்பந்தன்

Sri Lankan Tamils R. Sampanthan Sri Lanka Sri Lankan political crisis
By Pavan Jan 14, 2024 02:50 PM GMT
Report

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அவரது அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அந்தச் செய்தியில் சம்பந்தன் கூறியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்

சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்

தமிழ் மக்களின் பிரச்சினை

"கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள - தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர்.

எனினும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்! நிபந்தனைகளை கூறிய சம்பந்தன் | Tamils Issue Eelam Sampanthan Pongal

இந்நிலையில், ஒவ்வொரு தைப்பொங்கலையும், தமிழ் - சிங்கள புத்தாண்டையும் தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்புடனேயே கடந்து சென்றுள்ளனர்.

இந்தத் தடவை தைப்பொங்கல் காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதற்கு ஏற்ற முறையில் அவர் செயற்படுவார் என நம்புகின்றோம்.

இனவாத அரசியல்

ரணில் விக்ரமசிங்கவுக்கு வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆசை அன்றிலிருந்து இருந்தது. எனினும், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதனால் தமிழ் மக்களின் நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிவடைந்தது.

ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்! நிபந்தனைகளை கூறிய சம்பந்தன் | Tamils Issue Eelam Sampanthan Pongal

தென்னிலங்கையின் இனவாத அரசியலுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பில் எமது செய்தியாளர் சம்பந்தனிடம் வினவியபோது அவர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016