தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் : வேலன் சுவாமிகள் பகிரங்க கோரிக்கை
இலங்கையின் சிங்கள, பௌத்த பேரினவாத அரசிடம் இருக்கின்ற மகாவம்ச மனநிலையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு தனிநாட்டை நாட்டை உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் இன்று (03) இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இது எங்களுடைய நாடு என்று நாங்கள் உணரவில்லை, அந்நிய நாடாக, வேற்றினமாக தான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இங்கு நடக்கின்ற காவல்துறை பரிசோதனைகளும், சோதனைச் சாவடிகளும், காவல்துறையினர் எங்களை நடத்துகின்ற விதமும் இது எங்களுடைய நாடு என்ற மனநிலையை தோற்றுவிக்கவில்லை.
ஆகவே ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது சர்வதேசத்தாலே வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்." என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |