ட்ரம்பின் அறிவிப்பால் குழப்பம்: முடிவுக்கு வருகிறதா சீனாவுடான வரிப்போர்..!
அதிகரித்து வரும் வரி யுத்தத்திற்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சீனாவுடன் மிகச் சிறந்த ஒப்பந்தம் செய்து கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவிற்குள் (US) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா (China) இப்போது 245 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ளும் என்று அமெரிக்கா அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவின் விருப்பம்
அதன்போது, யாரும் தங்களுடன் போட்டியிட முடியாது என்றும் தாங்கள் சீனாவுடன் மிகச் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என தான் நினைப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மெக்சிகோ ஜனாதிபதியுடன், மிகவும் பயனுள்ள உரையாடலை நடத்தியதாகவும், ஜப்பானிய வர்த்தக பிரதிநிதிகளை மிக உயர்ந்த மட்டத்தில் சந்தித்ததாகவும் தற்போது சீனா உட்பட உட்பட ஒவ்வொரு நாடும் சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவது அமெரிக்கா அல்ல, சீனாவின் விருப்பம் என்று டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்ப்பதாக முன்னர் வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
சீனா எதிர்ப்பு
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் , தங்கள் வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாட பேச்சுவார்த்தை மேசைக்கு வருவது சீனாவின் பொறுப்பு என்று கூறியதற்கு சீனா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு அச்சுறுத்துவதையும் மிரட்டுவதையும் நிறுத்துமாறு சீனா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, “சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
