பச்சை குத்துதல் தொடர்பான ஏற்பாடுகளை நீக்க நடவடிக்கை : சட்டமா அதிபர் அறிவிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருந்த 'பச்சை குத்துதல்' மற்றும் 'அடையாளங்கள்' தொடர்பான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் தீவிர குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் எந்தவொரு தகவலையும் அல்லது விடயத்தையும் ஊடகங்களில் வெளியிட முன்னர், உரிய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவையும் நீக்கவுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சட்டமா அதிபர்
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த அறிவிப்பை நீதிமன்றத்தில் விடுத்தார்.

இதேவேளைமுன்மொழியப்பட்ட 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று கூறி, அவற்றை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |