கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி : வெளியான தகவல்
கனடாவில் (Canada) இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க (America) அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்த அறிவிப்பு பெப்ரவரி முதலாம் திகதி வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சீனாவில் (China) இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக பத்து சதவீத வரி விதிக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு நடவடிக்கை
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் (20) பதவியேற்ற நிலையில் பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல் மற்றும் அமெரிக்காவின் தென்பகுதி எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |