கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி!

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe V S Radhakrishnan
By Beulah Nov 25, 2023 03:26 PM GMT
Report

சம்பள நிர்ணய சபையா அல்லது கூட்டு ஒப்பந்தமா என்று தற்போது பேசப்படுகிறது, என்னை பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீர் வழங்கல்,தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

விசா இல்லாமல் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி!

விசா இல்லாமல் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி!

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி

“1994 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மலையகத்துக்கு என்று தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்ற அமைச்சை உருவாக்கி, காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமானுக்கு அந்த அமைச்சை வழங்கினார்.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

மலையகத்துக்கு என்று ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டதன் பின்னரே மலையகத்துக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட காணி விவகாரத்துக்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சகல துறைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

லயன் குடியிருப்புகளில் தீ விபத்து

பெருந்தோட்ட பகுதிகளில் லயன் குடியிருப்புகளில் தீ விபத்து வழமையானதொன்றாக காணப்படுகிறது.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

கடந்த ஆண்டு 795 குடும்பங்களை சேர்ந்த 3306 பேரும்,2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 10 மாத காலப்பகுதியில் 73 குடும்பங்களை சேர்ந்த 307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களின் போது அனர்த்த முகாமைத்துவ நிலையம் கவனத்திற் கொள்ளாமல் செயற்படுகிறது.

பெருந்தோட்ட கம்பனிகள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுவது நியாயமற்றது.

காணப்படும் சட்ட சிக்கல்களை அனர்த்தங்களின் போதும்,அதன் பின்னரான போதும் குறிப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது.

கூட்டு ஒப்பந்தம்

சம்பள நிர்ணய சபையா அல்லது கூட்டுவொப்பந்தமா என்று தற்போது பேசப்படுகிறது. என்னை பொறுத்தவரை கூட்டுவொப்பந்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

கூட்டுவொப்பந்தம் இல்லாத காரணத்தால் தோட்ட கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன.

ஆகவே கூட்டுவொப்பந்தம் தொடர்பான தீர்மானங்களுக்கு மலையக மக்கள் முன்னணி இணக்கம் தெரிவிக்கும்.

மலையகம் தொடர்பில் குறைகளை மாத்திரம் குறிப்பிட முடியாது.பல நிறைகளும்,முன்னேற்றங்களும் காணப்படுகின்றன.

எமது மலையக இளைஞர் யுவதிகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதிக்கிறார்கள்.

எதிர்வரும் மாதம் 24 ஆம் திகதி மலையகம் 200 நிகழ்வை நாங்கள் நடத்தவுள்ளோம்.

எமது சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நவீன அடையாளத்தை நான் உறுதிப்படுத்த வேண்டும். 

ஸ்ரீபாத கல்லூரி

அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கினார் ஆனால் எதனையும் செய்யவில்லை.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

அவர் எவ்வாறானவர் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். கொட்டகல பகுதியில் கல்வியியற் கல்லூரி அமைக்கப்பட்ட போது அதற்கு ஸ்ரீ பாத என்று பெயர் சூட்ட வேண்டும், தமிழ் மாணவர்களுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வலியுறுத்தினார்.

அதன் போது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீபாத கல்லூரியில் 75 சதவீதம் தமிழ் மாணவர்களுக்கும்,25 சதவீதம் சிங்கள மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தற்போதும் அவர் இந்த நிலையில் இருந்து மாற்றமடைந்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”என்றார்.

2024 இல் நாட்டு மக்களுக்கு நெருக்கடி : துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை!

2024 இல் நாட்டு மக்களுக்கு நெருக்கடி : துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026