ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும் 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்கள் அறிவைப் புதுப்பிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பக் கல்வி
ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாதுதெனவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பள்ளி பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும் என்றும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 100 பள்ளிகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |