15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை! சிக்கிய தனியார் வகுப்பு ஆசிரியர்
15 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் 42 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை கண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக வகுப்பு நடத்துவதற்காக சிறுமியின் வீட்டிற்குச் சென்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கண்டி காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், திருமணமான 42 வயதுடையவர் எனவும், அவரது மனைவி சுகாதாரத்துறையில் பணியாற்றி வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை காவல்துறையினர் கைப்பற்றி பரிசோதித்துள்ளதுடன், அதில் ஆபாசமான காட்சிகள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் நிலூகா பாலிபான தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |