தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்! தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு

Batticaloa Mysterious Death Indian Peace Keeping Force
By Dharu Sep 13, 2026 11:33 PM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்குப் பின்னரான புதிய தகவல்களை ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பரராஜசிங்கத்தின் மனைவி உள்ளிட்ட மேலும் பலரும் காயமடைந்தனர். அவர்களில் ஒரு கத்தோலிக்க அருட்சகோதரியும் இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர். இதனால், இந்தத் தாக்குதல் எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதும் வெளிப்படுகிறது.

பரராஜசிங்கம் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில், உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது வெளிப்படுகிறது.

அவரை வேறு இடங்களிலும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை, எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மத்தியில் தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்தப் படுகொலை பொதுவாக கருணா மற்றும் பிள்ளையான் சார்ந்த குழுக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு,  மற்றும் கருணா குழு உள்ளிட்ட பல தரப்புகள் தொடர்புபட்டிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தனது கண்முன்னேயே இடம்பெற்றதாகக் கூறும் புலனாய்வு ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் ஜோசப் பரராஜசிங்கத்தை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், தனது கைகளிலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியில் இதுவரை வெளிவராத பல கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் ‘உண்மைகள்’ நிகழ்ச்சி....

ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்..! அச்சமூட்டும் துருக்கியின் ராணுவத் திட்டம்!

ஐரோப்பா-இஸ்ரேல்-இந்தியா ஆபத்தில்..! அச்சமூட்டும் துருக்கியின் ராணுவத் திட்டம்!

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026