புதிய முறையில் ஆசிரியர் இடமாற்றம் - கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றம் ஒன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளுடன் இடமாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
துல்லியமான தரவுகளை அளிக்க வேண்டும்
செயல்முறையை விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ள, கணனியை தினமும் புதுப்பிக்க வேண்டும். எனவே, ஆசிரியர்கள் வழங்கும் தகவல்களின் துல்லியத்தை அவர்கள் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய முறை குறித்து அனைத்து அரசுப் பாடசாலை ஆசிரியர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள் இருந்தால்
https://nemis.moe.gov.lk ஊடாக மனித வள முகாமைத்துவ தகவல் அமைப்பை அணுகுமாறும், வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதிப்படுத்துமாறும் அமைச்சு ஆசிரியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால், வலயக் கலவிப் பணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
