அடுத்த வாரம் 8000 பேருக்கு ஆசிரியர் நியமனம் - வெளியான அறிவிப்பு!
Sri Lanka
Government Of Sri Lanka
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
By Pakirathan
கல்வியியற் கல்லூரிகளில் இருந்து டிப்ளோமா பட்டதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதனை கல்வி இராஜாங்க அமச்சர் ஏ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியமனங்கள்
மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்காக தெரிவாகியுள்ள 2500 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி அதிபர் ரணில் விரமசிங்க தலைமையில் நடைபெறும்.
ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களது நியமனங்கள், அந்தந்த மாகாணங்களில் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி