மற்றுமொரு கல்விச் செயற்பாட்டிலிருந்தும் விலகும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள்
protest
teachers
principal
By Jaso
ஆசிரியர், அதிபர்களின் வேதனப் பிரச்சனையை தீர்க்கக் கோரியும், கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் கற்பித்தல் செயற்பாட்டிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர்.
தற்போது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அழகியற்கலை செயன்முறை பரீட்சைகளில் இருந்து விலகவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கல்வியமைச்சிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்