ட்ரம்ப் புறப்பட்ட உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு!
பிரித்தானிய பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணித்த உலங்குவானூர்தியொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாட்களுக்கு அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் மனைவி மெலானியா ட்ரம்ப்புடன் செக்கர்ஸ் மாளிகையிலிருந்து ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்குப் பிரத்யேக உலங்குவானூர்தியில் புறப்பட்டிருந்தார்.
பயணத்தில் ஏற்பட்ட தாமதம்
அதன்போது, குறித்த உலங்குவானூர்தியில் சிறிய குறைபாடு கண்டறியப்பட்டதால், விமானிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் அதை லூடன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள தளத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
Image Credit: The Independent
பின்னர் பாதுகாப்பு ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டிருந்த மாற்று உலங்குவானூர்தியில் ட்ரம்பும் அவரது மனைவியும் ஏறி, ஸ்டான்ஸ்டெட்டுக்கு சென்றனர்.இதனால் அவர்களின் பயணத்தில் சுமார் 20 நிமிட தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் அறிவிப்பு
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில், உலங்குவானூர்தி மாற்றம் முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதும், ஜனாதிபதிக்கு அவருடைய மனைவிக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Image Credit: Firstpost
இந்த பயணத்தின் போது ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரை சந்தித்து உரையாடியதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
