வெப்பநிலை அதிகரிப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பொதுவைத்திய நிபுணர். த. பேரானந்தராஜா தெரிவித்தார்.
அதிகரித்த வெப்பநிலை தொடர்பில் இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வெப்பமான இடங்களில் நிற்றல், அதிக உடற்பயிற்சி, காற்றோண்டமின்மை போன்ற காரணிகளால் வெப்பத்தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்
இதனைத் தடுப்பதற்கு அதிக நீர் அருந்துதல், உடற்பயிற்சியினை தவிர்த்தல், மெல்லிய பருத்தி ஆடைகளை அணிதல், மதுபானம் மற்றும் சூடான பானங்களை அருந்துவதை தவிர்த்தல், காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை வெளியில் வேலைசெய்வதை தவிர்த்தல் நன்று.

வெப்பத்தாக்கம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரை குளிர்மையான இடத்தில் சேர்த்து மேலதிக ஆடைகளாக இருப்பவற்றை களைந்து குளிர்மையான நீரை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கவேண்டும், உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |