இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய சலுகை!
நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தினை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
சுற்றுலாப் பயணிகள்
இலங்கைக்கு (Sri Lanka) வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை வெரஹெர வரை செல்ல வேண்டியிருந்தது.
இது தொடர்பாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஓட்டுநர் உரிமம்
இதேவேளை, இந்த நடைமுறை மூலம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் நாடுகளில் வழங்கிய ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக இருக்க வேண்டுமென்பது என குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |