சாந்தனுக்கு அனுமதி வழங்கியது இந்திய அரசு! வழங்கப்பட்டது கடவுச்சீட்டு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள ஒருவரான சாந்தன் என்கிற சுதந்திரராஜாவிற்கு இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்தினால் குறித்த கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 32 வருடகால சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலையாகி அவருக்கு நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனுக்கு சென்னையில் உள்ள இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகரகம் தற்காலிக பயண ஆவணத்தை வழங்கியுள்ளதாக சென்னை மேல் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதேவேளை, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளாக தண்டனை பெற்ற நளினி மற்றும் ஸ்ரீ ஹரன் என்கிற முருகன் ஆகியோர், தங்களை லண்டனில் உள்ள தங்கள் மகளிடம் செல்ல அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |