இலங்கையைத் தாக்கும் பயங்கரமான டெல்டா பிளஸ்! கடும் தொனியில் வெளிவந்த எச்சரிக்கை
Corona
People
Delta
SriLanka
Padma Gunaratne
By Chanakyan
பயங்கரமான டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் திரிபு இலங்கைக்குள் வரும் ஆபத்து இருப்பதாக இலங்கை மருத்துவச் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பத்மா குணரத்ன (Padma Gunaratne) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் திரிபு சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பு இதுவரை கருத்து வெளியிடவில்லை எனவும் அது குறித்து கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் திரிபு ஏனைய வைரஸ் திரிபுகள் போன்று நாட்டுக்குள் வரலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,