இன்று இரவு கோர விபத்து -14 பேர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனோவிட்ட பிரதேசத்தில் இன்று (26) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.