வெளிநாடொன்றில் பயங்கரவாத தாக்குதலில் 55 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
பயங்கரவாத குழு
அத்தோடு, காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்ற நிலையில், பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் நிலம் மற்றும் சுரங்களை கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
பதற்றமான சூழ்நிலை
இந்தநிலையில், காங்கோவின் இடுரி மாகாணம் பஹிமா பட்ஜிரா பகுதியில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதிகள் நேற்று (10) தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 55 பேர் உயிரிழந்ததுடன் கிராமங்களில் உள்ள வீடுகளை பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)