இலங்கை மக்களுக்கு மற்றொரு பேரிடியை கொடுக்கத் தயாராகும் அரசாங்கம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்
By Shalini
மாதம் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கல்வி மற்றும் சுகாதார போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்கு இந்த வரி பயன்பட வேண்டும்.
இந்த வரி சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பாக குறிப்பிடப்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், ஏராளமான இலங்கையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக சர்வதேச பாடசாலைகளில் சேர்த்து அதற்காக பணம் செலுத்துகின்றனர்.
அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் பலர் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கிறார்கள்.
அவர்களும் உரிய வரி செலுத்த வேண்டுமா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.