அமெரிக்காவில் நடைபெற்ற கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தமிழ்குடும்பம்
அமெரிக்காவின்(USA) டெக்சாஸ்(TEXAS) மாகாணத்தில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தமிழர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது, டெக்சாஸில் உள்ள லம்பாசாஸ் கவுண்டி அருகே புதன்கிழமை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் லியாண்டர் பகுதியில் வசித்துவந்த 45 வயது அரவிந்த் மணி, அவரது மனைவி பிரதீபா அரவிந்த், 40, மற்றும் இவர்களது 17 வயது மகள் ஆண்ட்ரில் அரவிந்த் ஆகிய மூவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கோர விபத்து
குறித்த விபத்து தொடர்பில் தெரியவருகையில், சம்பவத்தன்று வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றிற்கு மகளுடன் புறப்பட்ட அரவிந்த் மற்றும் பிரதீபா தம்பதியினரின் கார் எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கியுள்ளது.
மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இந்த விபத்தில் மொத்தம் ஐவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தில் ஏற்பட்ட சேதம், உயிரிழப்பு உள்ளிட்டவையை ஆய்வு செய்ததில் இப்படியான ஒரு மோசமான சாலை விபத்தை கடந்த 26 ஆண்டுகளில் தாம் பார்த்ததில்லை என காவல்துறையினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் ஏற்பட்ட சேதம்
160 கி.மீ வேகத்தில் வாகனம் வந்ததை விபத்தை நேரில் பார்த்த சாரதி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
இந்த குடும்பத்தில் அவர்களுடன் பயணிக்காத 14 வயது அதிரியன் (Adiryan) என்பவர் மட்டுமே எஞ்சியுள்ள ஒரே நபராவார்.
இந்த நிலையில் அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி பொதுமக்களிடன் இருந்து நிதி திரட்ட முடிவு செய்து அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுவரை 700,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |