தமிழர் தாயகத்தில் களைகட்டிய தைத்திருநாள்

Thai Pongal Mannar Trincomalee Jaffna Teaching Hospital
By Raghav Jan 14, 2025 07:55 AM GMT
Report

மனித குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாக தமிழர்களின் தைத்திருநாள் இன்று (14.01.2025)  கொண்டாடப்படுகின்றது.

உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்குமான ஒரு நன்றியறிதலாகக் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மனிதக் குலத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் நன்றியுணர்வு என்ற மாண்புமிக்க அம்சத்தை வருடத்தில் ஒருமுறை பரீட்சித்துப் பார்க்கும் நாளாகத் தைப்பொங்கல் அல்லது சூரியப்பொங்கல் அமைகிறது. 

இந்நிலையில் தாயகத்தின் பல பகுதிகளிலும் தைத்திருநாளை மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சீறிப்பாயும் காளைகள் : உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

சீறிப்பாயும் காளைகள் : உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இடம்பெற்றது.

தமிழர் தாயகத்தில் களைகட்டிய தைத்திருநாள் | Thai Pongal Celebrated Islandwide

இன்று காலை 8:00 மணியளவில் இடம் பெற்றது முன்னாதாக காலை 5;00 மணியளவில் விசேட ஹோம பூசைகள் இடம்பெற்று, 6:30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றது.

அதனைத்தொடரந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் உள்வீதி வலம் வந்து 8:00 மணியளவில் பொங்கல் இடம்பெற்றது. இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

-பு. கஜிந்தன்- 

தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

மன்னார்

உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் களைகட்டிய தைத்திருநாள் | Thai Pongal Celebrated Islandwide

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது.

மேலும் வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

-ஜோசப் நயன்-

அநுரவிடம் மக்களின் எதிர்பார்ப்பு தோல்வி! சாடும் முன்னாள் எம்.பி

அநுரவிடம் மக்களின் எதிர்பார்ப்பு தோல்வி! சாடும் முன்னாள் எம்.பி


வவுனியா

வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் வவுனியா உழவர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.

தமிழர் தாயகத்தில் களைகட்டிய தைத்திருநாள் | Thai Pongal Celebrated Islandwide

அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

திருகோணமலை

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் இன்று (14) வெகு விமர்சையாக வீடுகளில் கொண்டாடினர்.

தமிழர் தாயகத்தில் களைகட்டிய தைத்திருநாள் | Thai Pongal Celebrated Islandwide

அந்த வகையில் மூதூர் - மல்லிகைத்தீவு பிரதேசத்தில் உள்ள இந்து மக்கள் தமது வீடுகளில் பொங்கல் பொங்கி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக உழவர் திருநாளை கொண்டாடியதையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.

-மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி-

தமிழர் பிரதேசத்தில் களைகட்டும் பொங்கல் வியாபார நடவடிக்கைகள்

தமிழர் பிரதேசத்தில் களைகட்டும் பொங்கல் வியாபார நடவடிக்கைகள்

ஹற்றன்

உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில்  மலையகத்திலும் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் களைகட்டிய தைத்திருநாள் | Thai Pongal Celebrated Islandwide

ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ சந்திரானந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

-க.கிஷாந்தன்-

YOU MAY LIKE THIS...


சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி அநுர

சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி அநுர

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025