பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
srilanka
corona virus
people
thai pongkal
By Vasanth
எதிர்வரும் வியாழக்கிழமை தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாட வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுக்கு பொறுப்பான விசேட நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.
முடிந்தளவு நடமாட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை பேணி பொங்கள் விழாவினை கொண்டாடுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முடிந்தளவு பயணங்களை தவிர்க்க வேண்டும்.
விடுமுறை என்ற காரணத்தால் வெளியே செல்லக் கூடாது. அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியில் செல்கையில் சுகாதார விதிமுறைகளை அணுசரிக்க வேண்டும்.
குறிப்பாக மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் வீடுகளில் தங்கியிருப்பது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி