தைப்பூச திருமஞ்ச பவனி காணும் மாவைக்கந்தன் !
தைப்பூச நாளன்று மாவைக்கந்தன் திருமஞ்சம் ஏறி பக்த அடியார்களுக்கு தன் அருட்கடாட்சத்தை அள்ளிவீசி வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டு இருப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்பொருட்டு,மாவைக்கந்தனுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சத்தின் வெள்ளோட்டமானது நேற்றைய தினம் (24) காலை 10:00 மணிக்கு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (25) எம்பிரான் மாவைக்கந்தனுக்கு தைப்பூச திருமஞ்ச பவனி இடம்பெற்றது.
அபிஷேக பூசை
தைமாதம் 11ம் நாளான இன்று (25) வியாழக்கிழமை தைப்பூச திருநாள் அன்று மாலை 2:30 மணிக்கு பால்குட பவனி ஆரம்பமானது.
பின்னர் மாலை 3:00 மணிக்கு இடம்பெறும் அபிஷேக பூசைகளைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வசந்தமண்டப பூசை நிகழ்ந்து தொடர்ந்து இலட்சார்ச்சணை இடம்பெறவுள்ளது.
தைப்பூச திருமஞ்ச பவனி
இவை அனைத்து பூர்த்தியானதன் பின்னர் மாவைக்கந்தன் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற 24 அடி உயரம் கொண்ட திருமஞ்சத்தில் பவனி வந்து பக்த அடியார்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
கிடைத்தற்கரிய இந்த பொன்னான தைப்பூச திருமஞ்ச பவனியை காண பக்தகோடிகள், பூசைப்பொருட்களுடன், பக்தி மலர் தூவியும் இறையருளைப்பெற மாவைக்கந்தனின் உறையிடம் நாடி இடையன்புடன் கூடி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |