தாமரைக் கோபுரத்தின் முதல் நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா..! வெளியான தகவல்
பொதுமக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தின் நுழைவுச்சீட்டு விற்பனை வருமானம் தொடர்பாக தகவல்களை தாமரைக் கோபுரத்தின் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க வெளியிட்டுள்ளார்.
இதன்படி, முதல் நாள் வருமானம் 15 லட்சத்தை அண்மிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று 2612 பேர் கொண்ட குழுவொன்று தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாகவும் அவர்களில் 21 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமரை கோபுரம்
ஆசியாவின் மிக உயரமான தாமரைக்கோபுரமானது நேற்றையதினம் பிற்பகல் 2 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தாமரை கோபுரத்தில் 29 ஆவது மாடி வரையுள்ள பகுதி மட்டுமே மக்கள் பார்வைக்கு விட்டமை குறிப்பிடத்தக்கது.