தமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் அனுமதித்திருப்போம் - பகிரங்கமாக கூறிய தேரர்

colombo sri lanka thero
By Vanan Apr 19, 2021 12:43 PM GMT
Report

தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்குமானால் அதனை ஆறுதல் வார்த்தையிலாவது அனுமதித்திருந்திருப்போம் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பட்டாளரான, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டை பெற்றிருந்தால், சர்வதேச அளவில் நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் சேதங்கள் கூட ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஹிட்லரைப் போல மாற வேண்டும். ஆனால் அவர் அவ்வகையில் இன்னும் மாறவில்லை என்று அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே இன்றைய பிரச்சினை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆட்சிக்கு அவர் வரமுன்னரே அவர் ஹிட்லரைப் போல செயற்படுவார் என்றே சில பௌத்த பிக்குமார்களும் கூட தெரிவித்தனர். எனினும் ஹிட்லர் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது குறைவான விடயமே என்று கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்திருக்கின்றது.

உண்மையில் ஹிட்லரைப் போல மாறினால் இறுதியில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலையே செய்துகொள்ள நேரிடும். ஹிட்லர் இறுதியில் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார். ஆகவே கோட்டாபயவும் சுட்டுத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றா இவர்கள் கூறுகின்றனர்? சில அமைச்சர்கள் இதனை இன்று அறியாமல் தெரிவிக்கின்றனர்.

இன்று கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு தாக்கம் செலுத்துகின்றது. தனிநாடாகவே அது உருவாகின்றது.

உண்மையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் போரின்போது தனிஈழ நாட்டை பெற்று வெற்றிபெற்றிருந்தால் நாட்டிற்கு இவ்வளவு சேதமொன்று ஏற்பட்டிருக்காது.

எங்களோடு எமது நாட்டோடு இருப்பவர்கள் என்று நினைத்து விடுதலைப் புலிகள் தனிநாடாக செயற்படுவதை சரியென்றும் ஆறுதல் கூறியிருந்திருக்கலாம்.

எனினும் இப்போது போர்ட் சிட்டியை முழுமையாக தனிநாடாக சுதந்தரித்துக்கொள்வதற்காக சீனா முயற்சிக்கின்றது. கோட்டாபயவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் இன்று இதனை சிந்திக்க வேண்டும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026