கிரிஷ் நிறுவன பணத்திற்கு நன்றி தெரிவித்த நாமல்! நீதிமன்றில் அம்பலமான கடிதம்

CID - Sri Lanka Police Namal Rajapaksa
By Dharu Oct 07, 2026 11:41 AM GMT
Report

சர்ச்சைக்குரிய கிரிஷ் நிறுவனத்தால் இலஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயைத் தாம் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்து, நாடாளுடன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அனுப்பிய கடிதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் கையகப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு ஈடாக, 'கிரிஷ்' நிறுவனத்தால் இலஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபாயைத் தாம் பெற்றுக்கொண்டதை உறுதிசெய்து, நாமல் ராஜபக்ச அந்நிறுவனத்திற்கு நன்றிக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'கிரிஷ்' இலஞ்ச ஊழல் வழக்கு : நாமல் ராஜபக்சவை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்த உத்தரவு

'கிரிஷ்' இலஞ்ச ஊழல் வழக்கு : நாமல் ராஜபக்சவை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்த உத்தரவு

கையெழுத்து பரிசோதனை

நிமல் பெரேரா தலைவராக இருந்த 'சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் லிமிடெட்' என்ற விளையாட்டுக் கழகத்தின் கணக்கில், கிரிஷ் நிறுவனத்தால் சம்பந்தப்பட்ட தொகை வரவு வைக்கப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணத்தைச் சந்தேக நபரான நாமல் ராஜபக்ச பெற்றுக்கொண்டதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

கிரிஷ் நிறுவன பணத்திற்கு நன்றி தெரிவித்த நாமல்! நீதிமன்றில் அம்பலமான கடிதம் | Thanks To The Krish Company For The Funds Namal

உரிய தொகையைப் பெற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்து, நாமல் 2012 டிசம்பர் 15 அன்று கிரிஷ் நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரான நாமல் ராஜபக்ச சிறையில் உளள் நிலையில் அவரது கையெழுத்து மாதிரிகளை எடுத்து, கடிதத்தில் உள்ள கையெழுத்தைப் பரிசோதிப்பதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்க அனுமதி வழங்குமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான, கொழும்பு கோட்டையில் உள்ள மதிப்புமிக்க நிலத்தைக் கையகப்படுத்துவதற்குத் தேவையான ஒப்புதலை விரைவாகப் பெறுவதற்காக, அந்நிறுவனத்தின் இந்திய தேசிய இயக்குனர்களான அமித் கத்யால் மற்றும் ராஜேந்திர பிரசாத் குப்தா ஆகியோர் 7 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜானகியின் 70 மில்லியன் பரிவர்த்தனை! நாமல் விவகாரத்தில் சிக்கிய இந்திய பணிப்பாளர்கள்

ஜானகியின் 70 மில்லியன் பரிவர்த்தனை! நாமல் விவகாரத்தில் சிக்கிய இந்திய பணிப்பாளர்கள்

நான்காவது சந்தேக நபர்

இவ்வழக்கில் மூன்றாவது மற்றும் நான்காவது சந்தேக நபர்களான ஜானகி சிறிவர்தன மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், தனது வாதங்களை முன்வைத்த இலஞ்ச ஆணைக்குழு, இந்தப் பரிவர்த்தனை நிறுவனத்தின் வழக்கமான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்று கிரிஷ் நிறுவனத்தின் கணக்காளர் வாக்குமூலம் அளித்திருந்ததாகத் தெரிவித்தது.

நிமல் பெரேரா அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராகவோ, ஊழியராகவோ அல்லது பிற சேவை வழங்குநராகவோ இல்லாதபோதிலும், அவருக்கு இந்தத் தொகையைச் செலுத்துமாறு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

2012-ஆம் ஆண்டு முதல் சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ரக்பி போட்டிகள் நடத்தப்பட்டு வந்தபோதிலும், இந்த 70 மில்லியன் ரூபாய் தொகையானது ரக்பி அல்லது வேறு எந்த விளையாட்டையும் மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கோ அல்லது விளம்பரதாரராக வழங்கப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026