பிள்ளையானை அடுத்து கைதாகப் போகும் சாணக்கியன் : தொடரும் அநுரவின் அதிரடி
அண்மைய நாட்களாக இலங்கை அரசியல் களமானது உள்நாடு உட்பட சர்வதேச அளவிலும் மிகவும் சூடுபிடித்துள்ளது.
அடுத்தடுத்து இடம்பெறும் அரசியல் கைதுகள், சிக்கும் பெரிய பெரிய தலைமைகள் என அடுத்து யார் சிக்குவார்கள் என்ற அடிப்படையில் அரசியல் களம் அதிர்ந்து கொண்டிருக்கின்றது.
இதன், ஆரம்பக்கட்டமாகத்தான் அண்மையில் பிள்ளையானின் கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்த நிலையில், தமிழ் தரப்பு மற்றும் தென்னிலங்கை தரப்பு அரசியலில் இது பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.
இவ்வாறான, பிண்ணனியில் பிள்ளையானை தொடர்ந்து சிக்கப்போகும் அடுத்த தலைமை யார் என்ற அடிப்படையிலும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், நேற்று (10) நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் சரமாரி வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.
இவ்வாக்குவாத்தில் பிமல் ரத்நாயக்க சாணக்கியனை நோக்கி கடுமையான வார்த்தைகளை பிரயோகித்திருந்ததுடன் வடக்கு கிழக்கை அழித்தவர்களோடு நீங்கள் உறவில் இருந்தவர்கள் அல்லவா எனவும் கடுமையான கேள்விகளை முன்வைத்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுடன் சாணக்கியன் தொடர்புற்றிருந்ததாகவும் சாணக்கியன் பற்றிய தகவல்கள் பல என்னிடம் இருக்கின்றது எனவும் அவற்றை நாடாளுமன்ற ஹன்சார்ட்டிற்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பிள்ளையானை அடுத்து சிக்கப்போவது சாணக்கியன் என சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருவதுடன் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு காணிகளை வைத்திருக்கும் சாணக்கியனுக்கு அடுத்து என்ன நடக்க போகின்றது எனவும் மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
