மட்டக்களப்பு நாவற்குடாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்
Sri Lanka Police
Batticaloa
Attempted Murder
Sri Lankan Peoples
By Kiruththikan
ஆணின் சடலம்
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பொதுச் சந்தைக்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (18) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நாவற்குடா இந்து கலாசார நிலையத்திற்கு முன்னால் உள்ள பொதுச்சந்தைக்கு அருகில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.



4ம் ஆண்டு நினைவஞ்சலி