கணவரின் உடல் தோண்டியெடுத்து உடல் பாகங்கள் திருட்டு : மனைவி முறைப்பாடு
வெலிப்பன்ன கல்மட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடல் உறுப்புகள் எடுத்துச் செல்லப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி கல்மட்ட பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான டொன் ரங்க விராஜ் ஜயசிங்க தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி சடலம்
நீதிமன்ற உத்தரவின்படி அவரது சடலம் கல்மட்ட, வெலிப்பன்ன காவல்துறை பிரிவில் உள்ள குருதிப்பிட்டி புதைகுழியில் கொங்கிறீட்டில் ஆன கல்லறையில் புதைக்கப்பட்டது.
அவரது மனைவி மற்றும் உறவினர்கள் விசேஷ நாட்களில் கல்லறையை சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இறந்தவரின் மனைவி பி.தில்ஹரி பிரசங்கிகா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சடலம் தோண்டியெடுக்கப்பட்டமை தொடர்பில் வெலிப்பன்ன காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |