ரிஷாத் பதியுதீனின் உறவினர் வீடுகளுக்கு 11 பெண் பிள்ளைகளை அழைத்து வந்த தரகர் - நீதிமன்றில் அம்பலமானது தகவல்

girls broker richard relation
By Sumithiran Jul 24, 2021 06:03 PM GMT
Report

  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் இஷானிலி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிசார், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார், கொழும்பு வடக்கு சிறுவர், மகளிர் விவகார பிரிவு ஆகியன விசாரணைகளை மேற்கொண்டிருந்தன.

இந்த விசாரணைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உறவினர்களின் வீடுகளுக்கு 11 பெண் பிள்ளைகளை இடைத் தரகர் அழைத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த தகவலை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, இடைத்தரகர் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அத்துடன் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மற்றுமொரு பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து அவருடைய மைத்துனர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நால்வரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் இந்தச் சம்பவம் சந்தேக நபர்களில் ஒருவரான தரகரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 30 ஆயிரம் பணத்திற்குப் பதிலாக, பெண்ணின் தாயார் குறித்த தரகர் ஊடாக வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோல, குறித்த இடைத் தரகர், 11 பெண் பிள்ளைகளை ரிஷாட் பதியுதீனின் உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்த சிறுமி 16 வயதை அடைந்து நான்கு நாட்களான 2020 நவம்பர் மாதம் 18ஆம் திகதி இவ்வாறு பணிப் பெண்ணாக அழைத்துவரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமி வீட்டின் சமையல் அறைக்கு வெளியே, ஆறுக்கு நான்கு அடி அறையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த அறைக்கு மின்சார இணைப்பு இருந்த போதிலும், தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி குறித்த சிறுமி பாதுகாப்பற்ற முறையில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் சட்டம் இயற்றப்படும் சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது கவலையளிக்கும் விடயம் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில். வைத்தியசாலையில் உள்ள குறித்த வீட்டின் தலைவர் ரிஷாட் பதியூதீனிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் நால்வரையும் அடுத்த 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதேவேளை, வரும் 26ஆம் திகதி சந்தேக நபர்களை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். இதனையடுத்து ரிஷாட் பதியுதீனின் மனைவி கிருலப்பனை பொலிஸ் நிலையத்திலும், ஏனைய மூவரும் பொரள்ளை பொலிஸ் நிலையத்திலும் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025