கோட்டா - மகிந்த மீது விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

mahinda vijitha herath gota
By Sumithiran Jun 02, 2021 01:30 PM GMT
Report

இலங்கை கடல் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கோட்டா - மஹிந்த அரசாங்கம் தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

பல வருடங்கள் தொடரப்போகும் ஒரு பேரழிவு தொடர்பாக பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அமைச்சர்களும் அரசாங்கமும் தமது தவறை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கப்பலின் அழிவுடன் இரசாயனங்கள் பற்றிய அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீன்பிடி குறித்து உடனடியாக விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை நடத்தி பொதுமக்களுக்கு தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். மீன் நுகர்வு தொடர்பான அச்சங்களைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மீன்பிடி சமூகத்திற்கு 5,000 ரூபாய் கொடுத்து அந்த உயிர்களை காப்பாற்ற முடியாது. வலைகள் சேதமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மீன்பிடித் தொழிலில் ஏராளமான மீன் பிடிப்பவர்கள் மற்றும் நடமாடும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் நீதி வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறோம். மறுபுறம் கடல் சேதம் மற்றும் கடலோர சமூகத்திற்கான சேதம் குறித்து துல்லியமான மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பொருத்தமான காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தகுந்த இழப்பீடு பெற்று மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் கடல் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தவறிவிட்டது. பணத்தால் கிடைக்கும் இழப்பீடு இதற்கு பதில் இல்லை. பல ஆண்டுகளாக தொடரப்போகும் ஒரு பேரழிவு தொடர்பாக பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அமைச்சர்களும் அரசாங்கமும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த கப்பலின் அழிவு இலங்கைக்கு மற்றொரு தோல்வியாக அமைந்துள்ளது.

உலகின் கப்பல் நிறுவனங்கள் எங்கள் துறைமுகங்களை அணுக தயங்கக்கூடும். இது குறைந்த வசதிகளைக் கொண்ட துறைமுகம் என தகவல் பரவும் பட்சத்தில் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் வர தயங்குகின்றன. இது பொருளாதார ரீதியாக எங்களுக்கு மிகப்பெரிய தீமையாக அமையும். கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கதை வேடிக்கையானது.

இந்த பருவத்தில் இறால் அறுவடை உச்சத்தில் காணப்படும். மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளதால் சம்பாதிப்பதற்கான சிறந்த வாய்ப்பை அவர்கள் இழந்துள்ளனர். கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் கப்பல் தீ விபத்தால் இப்போது சிறிய அளவிலான மீனவர்களின் வருமானம் முற்றிலுமாக இழக்கப்பட்டுள்ளது. மீன்பிடி வலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மிகவும் கடினமான சூழ்நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களுக்கு அதனை நீர்கொழும்பு சந்தையில் விற்பனை செய்ய முடியவில்லை.

இவை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025