கோட்டாபயவால் நாடு பெரும் நெருக்கடியில் -வெளிப்படையாக கூறிய அமைச்சர்
ஜனாதிபதி கோட்டாபய(gotabaya) எடுத்த முடிவால் நாடு தற்போது பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக பாடிக் கைத்தறி ஜவுளி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகள் துறை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara)தெரிவித்துள்ளார்.
வெலிபென்ன பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கிராமப்புற காலணி தொழில் முனைவோருக்கான உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் பங்கேற்ற போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
100% கரிம உரத்தை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்யும் நாடு உலகில் இல்லை. உலகின் 68 நாடுகள் 100% கரிம உரத்துடன் பயிரிட முயன்றும் தோல்வியடைந்துள்ளன.
இரசாயன உர இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி முடிவு செய்திருந்தாலும், பெரும் நெருக்கடி எழுந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"நாட்டிற்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு 400 மில்லியன் டொலர்கள் செலவாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தத் தொகையைக் குறைக்க இரசாயன உர இறக்குமதியை நிறுத்த முடிவு செய்தார், ஆனால் இறுதியில் இது பெரும் நெருக்கடிக்கு வழிவகுத்தது.
பேராசிரியர்கள், இருந்தனர். அவர்கள் கொண்டு வந்து காகிதத்தை கொடுத்தனர். வேலை நிறுத்தப்பட்டது. இன்று விவசாயி நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.