முடிவு மக்களின் கைகளிலேயே- ரணில் வெளியிட்ட தகவல்
நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான கால கட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அரசாங்கம் பிடிக்கவில்லையென்றால் தாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும், இப்போது முடிவு மக்களின் கைகளிலேயே இருப்பதாகவும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் அந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை அணுகியதாகவும் ஆனால் அந்த நேரத்தில் எந்தவொரு பொது நிவாரணத்தையும் குறைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.