ரூபா ஆறு கோடி கனவு கலைந்தது
Sri Lanka Police
STF
Sri Lanka Magistrate Court
Hatton
By Jaso
விலையுயர்ந்த வலம்புரியை 6 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கினிகத்தேனையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர் வலம்புரியொன்றை வைத்திருந்ததாகவும் அதனை விற்பனை செய்வதற்கு தயாராகி வருவதாகவும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்

சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் மற்றும் நுவரெலியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு அட்டன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்