வவுனியாவில் ஆரம்பமானது குடிசன தொகை மதிப்பீட்டின் இறுதி கட்டம்
Vavuniya
Sri Lankan Peoples
By Jaso
இலங்கையின்(sri lanka)15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீட்டின் இறுதி கட்ட கணக்கெடுப்பு இன்றையதினம்(15) வவுனியா(vavuniya) மாவட்ட செயலாளரும் தொகை மதிப்பு ஆணையாளருமான சரத் சந்திரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த ஆரம்ப நிகழ்வானது வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, பட்டானிச்சூர்புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பட்டகாட்டு கிராமத்தில் இடம்பெற்றது.
அரச அதிகாரிகள்
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் தி. திரேஷ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் அ.யூட் நேசராஜா, வவுனியா பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர் ந.திலீபன் மற்றும் தொகை மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்