புதிய வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்
                                    
                    Parliament of Sri Lanka
                
                                                
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Government Of Sri Lanka
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    எதிர்வரும் புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (01) பிற்பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்க புத்தாண்டு வேலைத்திட்டத்தை அமைச்சரவையில் முன்வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் விடுமுறை
இதேவேளை வெளிநாட்டுப் பயணங்களுக்கு இணைந்துள்ள அமைச்சர்களும் இதில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஆண்டுக்கான இறுதி அமைச்சரவைக் கூட்டம் கடந்த டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் கிறிஸ்மஸ் விடுமுறை காரணமாக அமைச்சரவைக் கூட்டம் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்